டெல்லியில் கடந்த சில நாட்களாக இடைவிடாத கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, டெல்லியில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் டெல்லி போலீசார் 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளனர். மேலும், வெள்ளம் பாதித்த பகுதிகளுக்கு மக்கள் அச்சமின்றி பார்வையிட சென்றதாலும், யமுனை நதியின் நீர்மட்டம் 207.55 மீட்டராகப் பதிவானதை அடுத்து இந்த உத்தரவு வெளியாகியுள்ளது.
டெல்லியின் பல்வேறு பகுதிகளில் இன்று முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், அடுத்த நான்கு முதல் ஐந்து நாட்களுக்கு இடைவிடாத மழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
அதாவது, டெல்லி யமுனை நதி நீர்மட்டம் அபாய அளவை எட்டியது. இன்று காலை 8 மணியளவில், நீர்மட்டம் 207.25 மீட்டராக பதிவாகி, ஆற்றில் அபாய அளவை தாண்டி வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்நிலையில், கரையோரம் வசித்த 30,000க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP