மருத்துவ கழிவுகளை கொண்டு செல்ல லாரிகளுடன் வந்த கேரளா அதிகாரிகள்!
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள…
திருநெல்வேலி மாவட்டத்தில் கொட்டப்பட்டுள்ள மருத்துவக் கழிவுகளை, தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவுபடி மீண்டும் தங்கள் மாநிலத்துக்கே கொண்டு செல்வதற்காக, கேரள அதிகாரிகள் லாரிகளுடன் வந்துள்ளனர்.திருநெல்வேலி மாவட்டத்தில் கேரளத்தின் மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளன என குற்றச்சாட்டுகள் எழுந்தது. தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை, எதிர்க்கட்சி தலைவர் இ.பி.எஸ்., உள்ளிட்டோர் நடவடிக்கை எடுக்க கோரி வலியுறுத்தி வருகின்றனர். இது குறித்து தென் மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம் தாமாக முன்வந்து விசாரணை நடத்தியது. தமிழக அரசு வழக்கறிஞர், ‘கேரளத்திலிருந்து லாரிகளில்…
தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெறுகிறது.இதன்படி சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று காலை 10 மணிக்கு தி.மு.க. தலைமை செயற்குழு கூட்டம் நடைபெற உள்ளது.இந்த கூட்டத்தில் கட்சியின் மூத்த நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்க உள்ளனர். இதில் கட்சியின் ஆக்கப் பணிகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டசபை தேர்தல் குறித்து விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் 2026…
அல்லு அர்ஜூன் நடிப்பில் கடந்த 2021-ஆம் ஆண்டு வெளியாகி, சக்கைப்போடு போட்ட படம் புஷ்பா. சுகுமார் இயக்கிய இப்படத்தில் நடிகர் அல்லு அர்ஜூன் செம்மரக் கடத்தல் காரனாக நடித்திருந்தார். அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடித்திருந்தார். இப்படத்தில் மலையாள நடிகர் பகத் ஃபாசில் வில்லனாக நடித்திருந்தார். இப்படம் இந்திய அளவில் ஹிட் அடித்தது. மாபெரும் வெற்றியைத் தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் சுமார் ரூ.350 கோடி பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியது. இப்படத்தை மைத்ரீ மூவி மேக்கர்ஸ் நிறுவனம்…
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் கும்பக்கரை அருவி அமைந்துள்ளது. இயற்கை எழில் கொஞ்சும் இந்த அருவிக்கு, கொடைக்கானல் மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் இருந்து நீர்வரத்து ஏற்படுகிறது. கும்பக்கரை அருவிக்கு தேனி மாவட்டம் மட்டுமின்றி தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்தும் மக்கள் சுற்றுலா வருவது வழக்கம். இந்த சூழலில், கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெய்த கனமழை காரணமாக அருவிக்கு வரும் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் சுற்றுலா…
பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு. இவருக்கு விஷ்ணு மஞ்சு, மனோஜ் மஞ்சு என்கிற இரண்டு மகன்களும், லட்சுமி மஞ்சு என்ற மகளும் உள்ளனர்.கடந்த சில நாட்களாக நடிகர் மோகன்பாபுவுக்கும் மகன் மனோஜ் மஞ்ஜுவுக்கும் இடையே சொத்து பிரச்சினை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதனையடுத்து, இருவரும் மாறி மாறி தொடர்ந்து போலீசில் புகார் அளித்து வருகின்றனர். இந்த சூழலில் கடந்த புதன் கிழமையன்று(11.12.2024) மனோஜ் மஞ்சு, மோகன் பாபு வீட்டிற்குள் சில ஆட்களுடன் நுழைய முயன்றிருக்கிறார். ஆனால்.மோகன்…
கோவையை சேர்ந்த திமுக முன்னாள் எம்.பி. இரா.மோகன் உடல் நலக்குறைவால் கடந்த டிச.10ஆம் தேதியன்று காலமானார். இந்நிலையில் இன்று அவரது வீட்டிற்கு சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், கோவை மாவட்டத்தில் திமுகவின் தூணாக விளங்கிய இரா. மோகன், சாதாரண நகரக் கழக செயலாளராக இருந்து சட்டமன்ற உறுப்பினராக, நாடாளுமன்ற உறுப்பினராக பணியாற்றி திமுகவிற்கு பெருமை சேர்த்தவர். அவருடைய மறைவு என்பது கோவை மாவட்டத்திற்கு மட்டுமல்ல, திமுகவிற்கு…
அம்பேத்கர் விவகாரம் தொடர்பாக நாடாளுமன்ற வளாகத்தில் பா.ஜ.க. எம்.பி.க்கள் மற்றும் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் என இரு தரப்பினரும் மாறி மாறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பா.ஜ.க. எம்.பி.க்கள் பிரதாப் சந்திர சாரங்கி மற்றும் முகேஷ் ராஜ்புத் ஆகியோருக்கு காயம் ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மக்களவை எதிர்க்கட்சி தலைவரான ராகுல் காந்தி தன்னை தள்ளிவிட்டதாக பிரதாப் சந்திர சாரங்கி பரபரப்பு குற்றச்சாட்டை…
மும்பையில் நேற்று மாலை கேட்வே ஆப் இந்தியா பகுதியில் இருந்து எலிபாண்டா தீவுக்கு சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு நீல் கமல் என்ற பயணிகள் படகு சென்றது. அப்போது, கட்டுப்பாட்டை இழந்து அதிவேகமாக வந்த கடற்படை படகு, பயணிகள் படகின் மீது மோதியது. இதில் இரு படகும் சேதமடைந்து மூழ்கின. படகுகளில் இருந்தவர்கள் கடலில் விழுந்து தத்தளித்தனர். இதையடுத்து கடற்படை மற்றும் கடலோர காவல் படையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் கடற்படை வீரர்,கடற்படை…
தமிழ்நாட்டில் சென்னை போன்ற முக்கிய நகரங்களில் தங்கத்தின் வர்த்தகம் மிகவும் அதிகமாக உள்ளது. சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலை அவ்வப்போது உயர்ந்தும், குறைந்தும் வருகிறது. ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வந்த தங்கம் விலை கடந்த அக்டோபர் மாதம் 30-ம் தேதி ஒரு சவரன் ரூ.59 ஆயிரத்தை கடந்து புதிய உச்சத்தை தொட்டது. அதனை தொடர்ந்து நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்தே தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் காணப்பட்டு வருகிறது. அந்த வகையில், நேற்று…
இந்திய பெருங்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றது. இந்த புயலுக்கு ‘சிடோ’ என பெயரிடப்பட்டது. இந்த புயல் கடந்த சில நாட்களாக கிழக்கு ஆப்பிரிக்கா அருகே கடலில் நிலை கொண்டுள்ளது. இந்த புயல் காரணமாக மலாவி நாட்டில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. தொடர் கனமழை காரணமாக பல பகுதிகளில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. சாலைகளில் நீர் தேங்கியுள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் மரங்கள் முறிந்து…