இஸ்ரேல் – ஹமாஸ் அமைப்பினர் இடையே கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் முதல் போர் நடைபெற்று வருகிறது. இந்த தாக்குதலில் ஆயிரக்கணக்கான இஸ்ரேலியர்களும், 40,000 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். 90 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர்கள் படுகாயமடைந்துள்ளனர். ஹமாஸ் அமைப்பின் கடைசி நபர் உயிருடன் இருக்கும் வரை இந்த வேட்டை தொடரும் என எச்சரித்த இஸ்ரேல், அதிதீவிர தாக்குதலை நடத்திக்கொண்டே இருக்கிறது.
சர்வதேச நாடுகள் இந்தப் போரை நிறுத்த பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இருப்பினும் போர் தொடர்ந்துக் கொண்டே இருக்கிறது. ஆனால், இஸ்ரேல் – பாலஸ்தீனத்திற்கும் இடையே கடந்த 1948 ஆண்டில் இருந்தே போர் நடந்து வருகிறது.ஹமாஸ் அமைப்பில் மிகவும் முக்கிய நபராக இருந்தவர் யாஹ்யா அய்யாஷ். இவர் எலெக்ட்ரிக்கல் என்ஜினியரிங் படித்தவர். இவரை அனைவரும் என்ஜினியர் என்றே அழைப்பர். இவர் வெடிப்பொருள்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றவர்.
வெடிபொருள்கள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருந்தபோதும், வீட்டில் இருக்கும் சோப்புத் தூள் உள்ளிட்டவற்றைப் பயன்படுத்தியே இவர் வெடிகுண்டுகளை தயார் செய்வார் என்று கூறப்படுகிறது. இவருக்கு திருமணமாகி ஒரு மகன் உள்ளார். இவர் இஸ்ரேலுக்கு எதிராக பல தாக்குதல்களை நடத்தி இருக்கிறார். கடந்த 1992 ம் ஆண்டு இஸ்ரேலுக்கு எதிரான தற்கொலைப் படை தாக்குதல் ஒன்று தோல்வியடைந்தது. அதில் சம்பந்தப்பட்ட தற்கொலைப் படை வீரர்கள் 3 பேரை இஸ்ரேல் படையினர் பிடித்தனர். அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தியதில் என்ஜினியரை பற்றிய தகவல் இஸ்ரேலுக்கு கிடைத்தது.