லண்டன் தி ஓவன் மைதானத்தில் மதியம் 3 மணிக்கு தொடங்கிய உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பவுலிங்கை தேர்வு செய்துள்ளது.
இந்திய கிரிக்கெட் அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் கடந்த இரு ஆண்டுகளாக தொடர்ச்சியாக சிறந்த திறனை வெளிப்படுத்தி வந்தது. இதன் தொடர்ச்சியாக கோப்பையை வெல்லும் கனவுடன் இந்திய அணி இறுதி போட்டியில் களம் இறங்கியுள்ளது. லண்டன் தி ஓவல் மைதானத்தில் இன்று தொடங்கியுள்ள இறுதிப்போட்டி வரும் 11 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.
ரோகித் ஷர்மா தலைமையிலான இந்திய அணியில் ஷுப்மன் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, கேஸ்.எஸ்.பரத், இஷான் கிஷன், அஜிங்க்ய ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்தர ஜடேஜா, அக்சர் படேல், ஷர்துல் தாக்குர், ஜெயதேவ் உந்த்கட், முகமது ஷமி, முகமத் சிராஜ், உமேஷ் யாதவ் ஆகியோர் களம் இறங்கியுள்ளனர்.
ஆஸ்திரேலிய அணியை பொறுத்தவரை பாட் கம்மின்ஸ் தலைமையில் டேவிட் வார்னர், ஸ்டீவ் ஸ்மித், மார்னஸ் லபுஷேன், உஸ்மான் கவாஜா, டிராவிஸ் ஹெட், மார்கஸ் ஹாரிஸ், கேமரூன் கிரீன், நேதன் யலன், டாட் மர்பி, அலெக்ஸ் கேரி, மிட்செல் ஸ்டார்க், ஸ்காட் போலண்ட், மைக்கேல் நேசர், ஜோஸ் இங்லிஸ் ஆகியோர் களம் இறங்குகின்றனர்.
இந்திய நேரப்படி மதியம் 3 மணி அளவில் டாஸ் போடப்பட்ட போது டாஸை வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் ஷர்மா, பவுலிங்கை தேர்வு செய்தார். இதனை அடுத்து ஆஸ்திரேலிய அணியின் டேவிட் வார்னரும், உஸ்மன் கவாஜாவும் ஓப்பனிங் பேட்ஸ்மேன்களாக களம் இறங்கினர். இதில் 10 பந்துகளை மட்டுமே சந்தித்த கவாஜா ரன் ஏதும் எடுக்காத நிலையில், முகமத் சிராஜ் பந்தை அடிக்க முற்பட்ட போது கேஸ்.எஸ்.பரத்திடம் காச் கொடுத்து பெவிலியன் திரும்பினார். இதனை அடுத்து மார்னஸ் லபுஷேன் களம் இறங்கினார். இந்நிலையில் மதியம் 3.20 மணி அளவில் வார்னரும், மார்னஸும் தலா 2 ரன்கள் எடுத்து நிதானமாக விளையாடி வருகின்றனர்.
NEWS EDITOR : RP