தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கிருஷ்ணா நகரைச் சேர்ந்த கோவிந்தசாமி என்பவரது மகன் கருப்பசாமி. இவர் கோவில்பட்டி கூடுதல் பஸ் நிலையம் அருகே லாரி ஒர்க் ஷாப் நடத்தி வருகிறார். இந்த நிலையில் ஒர்க் ஷாப் அருகில் கிடந்த காய்ந்த சருகுகள் கடும் வெயிலுக்கு திடிரென தீ பிடித்து பற்றி எரிந்தது.
இருந்த போதிலும் லாரி ஒர்க் ஷாப்பில் இருந்த சுமார் 5 லட்ச ரூபாய் மதிப்புள்ள பழுது நீக்கும் இயந்திரங்கள் உதிரி பாகங்கள் முற்றிலுமாக எரிந்து சேதமடைந்தன. இது குறித்து கிழக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
தொடர்ந்து தீயானது லாரி ஒர்க் ஷாப்பிற்கும் பரவியது. இதனைப் பார்த்த லாரி ஒர்க் ஷாப்பில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஊழியர்கள், அலறி அடித்துக் கொண்டு வெளியே ஓடினர். இதையடுத்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
NEWS EDITOR : RP