காஞ்சீபுரம் மேட்டுத்தெரு அருகேயுள்ள வள்ளல் பச்சையப்பன் தெருவில் அசோக் என்பவர் தங்கநகை கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் இருசக்கர வாகனத்தில் வந்த இளம்பெண் கடையில் நுழைந்து நகையை வாங்குவது போல் பல்வேறு நகைகளை பார்த்து கொண்டிருந்தார்.
இது குறித்து விஷ்ணு காஞ்சீ போலீஸ் நிலையத்தில் தகவல் அளித்ததன் பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெற்றிச்செல்வன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டு கண்காணிப்பு கேமரா காட்சிகளை கொண்டு அந்த இளம் பெண்ணை தேடி வருகின்றனர்.
கடை உரிமையாளரை திசை திருப்பிவிட்டு 48 கிராம் எடையுள்ள 2 தங்கச்சங்கிலியை எடுத்துக்கொண்டு கடைக்கு வெளியே நிறுத்தி வைத்திருந்த இருசக்கர வாகனத்தில் கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பிச்சென்று விட்டார்.
NEWS EDITOR : RP
Please follow and like us: