ஆஸ்கர் விருது பெற்ற தெலுங்குப் படமான ‘ஆர்ஆர்ஆர்’ படத்தின் ‘நாட்டு நாடு’ பாடல் இன்னும் உலகம் முழுவதும் உள்ள மக்களின் விருப்பமாகத் தொடர்கிறது. ஏறக்குறைய தினமும் இந்த பாடலில் வீடியோக்கள் மற்றும் ரீல்கள் தயாரிக்கப்பட்டு சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. அந்த வகையில் இந்த முறை நாட்டு நாட்டு பாடல் தொடர்பாக டென்னிஸ் ஜாம்பவான்களான கார்லோஸ் அல்கராஸ் மற்றும் நோவக் ஜோகோவிச் ஆகியோரின் போஸ்டர் இணையத்தில் வைரலாகி வருகிறது. விம்பிள்டனின் இறுதிப் போட்டியில் இருவரும் சந்திக்க நேர்ந்தால், மன அழுத்தத்திற்கு ஆளாக மாட்டோம் என்று ஜோகோவிச்சிற்கு, அல்கராஸ் கூறியதை அடுத்து இந்த பதிவு வந்துள்ளது.இந்த ஆண்டின் மூன்றாவது விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் போட்டி லண்டனில் கடந்த திங்கள்கிழமை தொடங்கியது. முதல் நாள் ஆட்டங்களில் ஆடவா் ஒற்றையா் பிரிவு முதல் சுற்றில், உலகின் 2-ஆம் நிலை வீரரான ஜோகோவிச் 6-3, 6-3, 7-6 (7/4) என்ற செட்களில் ஆா்ஜென்டீனாவின் பெட்ரோ கச்சினை வீழ்த்தினாா்.
விம்பிள்டன் போட்டியில் ஆடவா் ஒற்றையா் பிரிவில், ஸ்பெயின் வீரா் காா்லோஸ் அல்கராஸ், சொ்பியாவின் நோவக் ஜோகோவிச் ஆகியோருக்கு போட்டித்தரவரிசையின் முதலிரு இடங்கள் வழங்கப்பட்டுள்ளன. அதை விம்பிள்டன் தனது சமூக வலைதள பக்கங்களில் பதிவிட்டுள்ளது.
இது தொடர்பாக விம்பிள்டன் போட்டி நிா்வாகம் வெளியிட்டுள்ள அந்த பதிவில், தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகிய ‘ஆா்ஆா்ஆா்’ திரைப்படத்தில், ஆஸ்கா் வென்ற ‘நாட்டு நாட்டு’ பாடலுக்கு அல்கராஸ், ஜோகோவிச் நடனமாடுவது போன்ற போஸ்டா் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில், இரண்டு வீரர்களும் சென்டர் கோர்ட்டில் வெள்ளை டென்னிஸ் சட்டை மற்றும் ஷார்ட்ஸ் அணிந்து மின்னூட்டப் பாடலின் ஹூக் ஸ்டெப் செய்கிறார்கள். இது பகிரப்பட்டதிலிருந்து, 12 லட்சம் பார்வைகளையும், 12 ஆயிரத்தி 900k லைக்குகளையும் , ஏராளாமான கமண்டுகளையும் பெற்றுள்ளது.
NEWS EDITOR : RP