இஸ்லாமியர்கள், கிறிஸ்துவர்கள் குறித்து நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்த கருத்துக்கள் கடுமையான விவாதங்களை ஏற்படுத்தி உள்ளன.மணிப்பூர் மக்களும் நமக்கு வாக்களிக்க மாட்டார்கள், அதே போல் இங்குள்ள கிறிஸ்தவ மக்களும் வாக்களிக்க மாட்டார்கள், தேவனின் பிள்ளைகளாக இருந்த கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் சாத்தானின் பிள்ளைகளாக மாறி பல ஆண்டுகள் ஆகிவிட்டன என சீமான் பேசினார்.இந்நிலையில் இன்று வேளச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய சீமான், மன்னிப்பு கேட்டா ஓட்டு போடுவார்களா? அநீதிக்கு எதிராக உருவாக்கப்பட்ட மதங்கள் இஸ்லாமும், கிறிஸ்தவமும். ஆனால், இவர்கள் என்றாவது அநீதிக்கு எதிராக போராடியது உண்டா? என்று சீமான் கேட்டு மீண்டும் விமர்சனம் வைத்துள்ளார்.
அவரின் இந்த பேச்சு பெரிய சர்ச்சையான நிலையில் சீமானின் பேச்சுக்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் விமர்சனங்களை வைத்தன. அதேபோல் சில இஸ்லாமிய அமைப்புகள் சீமானுக்கு எதிராக காவல் நிலையத்திலும் புகார் வைத்தன.
NEWS EDITOR : RP