உலக தற்கொலை தடுப்பு தினம் செப்டம்பர் 10ஆம் தேதி அன்று கடைபிடிக்கப்பட்டு
வருகிறது. தற்கொலை செய்து கொள்வதைத் தவிர்ப்பதற்கும் அதைத் தடுப்பதற்கும்
மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு முயற்சிகளை தமிழக அரசும் மற்றும் பல்வேறு தனியார் தொண்டு நிறுவனங்கள் செய்து வருகின்றன. இதன் ஒருபகுதியாக மாரத்தான் ஓட்டம், வாக்காத்தான் போன்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது.இந்த நிலையில் சென்னை பெசன்ட் நகர் ஆல்காட் பள்ளி வளாகத்தில் சினேகா தற்கொலை தடுப்பு மையம் சார்பில் ”தற்கொலை என்பது ஒரு தீர்வு அல்ல ” எனும் தலைப்பில் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக மூன்று கிலோமீட்டர் வாக்கத்தான் நடைப்பயணத்தை திரைப்பட நடிகர் சித்தார்த் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.தற்கொலை தடுப்பு நாள் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இது மிகவும் முக்கியமான ஒன்று. மக்களுக்கு பல்வேறு பிரச்சனைகள் உள்ளதால் தற்கொலை எண்ணங்கள் வருகின்றது. அதற்கான விழிப்புணர்வு பேரணிதான் இன்று நடைபெற்றது.” என தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்தியா பாரத் என்று பெயர் மாற்றபடுகிறதே என பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்கு பதிலளித்த நடிகர் சித்தார்த் “ இந்தியாவில் சென்னையில் நாம் கூடி உள்ளோம். எந்த பெயரை யார் வைத்தார்கள்
என்பது தேவை இல்லாத ஆணி” என தெரிவித்தார்.இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய சென்னை மாநகராட்சி ஆணையர் ராதா கிருஷ்ணன் தெரிவித்ததாவது..
இன்று தற்கொலை தடுப்பு நாளை முன்னிட்டு பேரணி நடைபெற்றது. இந்தியாவில் சுமார் 1.8 லட்சம் பேர் தற்கொலை செய்கிறார்கள். நாள் ஒன்றுக்கு தமிழ்நாட்டில் 49 பேர் தற்கொலை செய்து கொள்கின்றனர். இது குறித்து விழிப்புணர்வு தேவை. தற்கொலை முயற்சிகளை தவிர்க்க வேண்டும். மற்றவர்களை அவமானப்படுத்தி விடுகிறோம். அவ்வாறு செய்வது தவறு.வாழ்கை என்பது வாழ்வதற்கு. பல்வேறு பேரிடர்களில் இருந்து தப்பியோர் வாழ நினைக்கின்றனர். மாநகராட்சியில் மழைநீர் வடிகால் பணிகள் 80 சதவீதம் நிறைவடைந்து இருக்கிறது.
NEWS EDITOR : RP