நான் இவரைத் தான் காதலிக்கிறேன் என திருமண வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார் நடிகை தமன்னா.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர் தமன்னா. தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான தமன்னா, பாகுபலி திரைப்படம் மூலம் இந்திய அளவில் பிரபலமானார்.
தற்போது நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில், சூப்பர் ரஜினிகாந்த்துடன் இணைந்து ‘ஜெயிலர்’ படத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் அவரது பப்ளி பவுன்சர் டிஸ்னி ஹாட் ஸ்டாரில் வெளியாகி நல்ல வரவேற்பினை பெற்றது. தொடர்ந்து வெப்சீரியஸ்களில் கமிட் ஆகி வருகிறார்.
தமன்னா குறித்து அவ்வப்போது திருமண வதந்திகள் உலா வரும். சமீபகாலமாக அதிகம் வரத் தொடங்கியுள்ள நிலையில், தமன்னா தற்போது விஜய் வர்மாவை காதலிக்கும் செய்தியை உறுதிப்படுத்தி இருக்கிறார்.
சமீபத்தில் ஊடகம் ஒன்றில் ஸ்டோரிஸ் 2 படத்தில் இருவரும் இணைந்து நடிக்கும் போது எங்களுக்குள் காதல் மலர்ந்ததாக தமன்னா தெரிவித்துள்ளார். “ஒருவர் சக நடிகராக இருப்பதாலேயே அவர்மீது காதல் கொள்வேன் என்று நான் நினைக்கவில்லை. எனக்கு எத்தனையோ சக நடிகர்கள் இருந்திருக்கிறார்கள். ஒருவர் மீது காதல் வரவேண்டும் என்றால், அவரிடம் தனிப்பட்ட முறையில் ஏதாவது ஒன்று பிடித்து இருக்க வேண்டும். அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை. மேலும் சரியான ஒரு நபரை தேர்ந்தெடுக்க புரிதல் மிகவும் முக்கியமான ஒரு விஷயம். விஜய் வர்மாவிடம் அது தனக்கு கிடைத்ததாக தமன்னா கூறி இருக்கிறார்.
NEWS EDITOR : RP