டிஜிட்டல்துறை வளர்ச்சியடைந்து வரும் இந்த காலகட்டத்தில் பணப்பரிவர்த்தனை என்பது மிகவும் எளிதாகிவிட்டது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் உள்ளிட்ட யுபிஐ செயலிகள் எளிதாக பணம் அனுப்ப உதவுகின்றன. அதுபோல சாதாரண டீக்கடையில் தொடங்கி மிகப் பெரிய துணிக்கடைகள், நகைக்கடைகள் என அனைத்து இடங்களிலும் ‘க்யூஆர் கோடு’ மூலமாக பணம் அனுப்பும் முறையை பெரும்பாலானோர் பயன்படுத்தி வருகின்றனர்.
- முதலில் எந்த யுபிஐ சேவை வழங்குநர் (ஜிபே, பேடிஎம், போன்பே) வழியாக பரிவர்த்தனை மேற்கொள்ளப்பட்டதோ அந்த நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்திற்கு புகார் அளிக்க வேண்டும். அதிகபட்சம் 24 – 48 மணி நேரத்திற்குள் பரிவர்த்தனை நீக்கப்பட்டு உங்களுக்கு பணம் திரும்ப கிடைக்க வழி செய்யப்படும்.
- வழங்குநரால் தீர்க்கப்படாத கோரிக்கைகளை இந்திய தேசிய பண செலுத்துகை நிறுவனத்தின் (என்பிசிஐ) இணையத்தளத்தில் புகார் அளிக்கலாம். புகாரின் போது பரிவர்த்தனைக்கான ஆதாரங்களை இணைக்க வேண்டும். பரிவர்த்தனை வகை, வங்கி பெயர், யுபிஐ ஐடி, மெயில் ஐடி, செல்போன் எண் உள்ளிட்ட தகவல்களைக் கொடுக்க வேண்டியிருக்கும். பின்னர் அந்நிறுவனம் சார்பில் உங்களைத் தொடர்பு கொண்டு புகாரை நிவர்த்தி செய்வார்கள்.
- அதே வேளையில், வங்கியைத் தொடர்பு கொண்டும் நீங்கள் புகார் அளிக்கலாம். நேரிலோ அல்லது வங்கியின் வாடிக்கையாளர் சேவை மையத்தைத் தொடர்பு கொண்டோ இந்தப் புகாரை நீங்கள் அளிக்க முடியும்.
NEWS EDITOR : RP
Please follow and like us: