நாடாளுமன்ற கட்டிடம் சிறப்பு அம்சங்கள் என்னென்ன

Spread the love

  • புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மொத்த மதிப்பீடு ரூ.1250 கோடி.
  • 4 மாடிகளுடன் 65 ஆயிரம் சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது.
  • 23 லட்சத்து 4 ஆயிரத்து 95 மனித வேலை நாட்கள் பயன்படுத்தப்பட்டு உள்ளன.
  • இந்த கட்டிடத்தின் ஆயுள் காலம் 150 ஆண்டுகள்.
  • கட்டிடக் கலையில் இந்தியாவின் அனைத்து மாநில அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.
  • மக்களவையில் 888 எம்.பி.க்கள், மாநிலங்களவையில் 384 எம்.பி.க்கள் என மொத்தம் 1272 எம்.பி.க்கள் அமர முடியும்.
  • மிர்சாபூர் கம்பளம், நாக புரி தேக்கு, திரிபுரா மூங்கில், ராஜஸ்தான் கல் சிற்பங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
  • சிவப்பு-வெள்ளை மார்பிள் ராஜஸ்தானில் இருந்தும், கேஷரியா பச்சை நிற கற்கள் உதய்பூரில் இருந்தும், சிவப்பு நிற கிரானைட் கற்கள் அஜ்மீரில் இருந்தும், வெள்ளை நிற மார்பிள் கற்கள் ராஜஸ்தானில் இருந்தும், ஜல்லிக் கற்கள் உத்தரபிரதேசம், ராஜஸ்தானில் இருந்தும் கொண்டு வரப்பட்டுள்ளன.
  • மேற்கூரைக்கான எக்கு டாமன் டையூவில் இருந்து வரவழைக்கப்பட்டது.
  • பித்தளை வேலைகள் குஜராத்திலும், மேசை, இருக்கைகள் செய்யும் பணி மும்பையிலும் நடந்தது.
  • அசோகர் சின்னத்துக்கான பொருட்கள் ராஜஸ்தான், மகாராஷ்டிராவில் இருந்து பெறப்பட்டன.
  • அரியானாவில் தயாரிக்கப்பட்ட எம்-சானட் மணல் கட்டுமான பணிக்கு பயன்படுத்தப்பட்டது. சிமெண்ட் கற்கள் அரியானா, உத்தர பிரதேசத்தில் இருந்து வர வழைக்கப்பட்டன.
  • 2020 டிசம்பர் 10-ந் தேதி அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2½ ஆண்டுகளில் கட்டப்பட்டுள்ளது.
  • மக்களவை மயில் வடிவத்திலும், மாநிலங்களவை தாமரை வடிவத்திலும் அமைக்கப்பட்டுள்ளது.
  • நாடாளுமன்ற கட்டுமான பணியில் ஈடுபட்ட கட்டுமான பணியாளர்களுக்கு சால்வை அணிவித்து நினைவு பரிசு வழங்கி பிரதமர் மோடி கவுரவித்தார்.
  • செங்கோலை உருவாக்கிய உம்மிடி ஜுவல்லர்ஸ் அதிபர்களையும் பிரதமர் மோடி கவுரவித்தார்.
Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram