குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ் ஆகியவை இதில் குறிப்பிடதக்கவை. இதனைத் தொடர்ந்து இட்லி ஐஸ்கிரீம் கலவை அதிர்ச்சியை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில் தற்போது சமோசா மஞ்சூரியன் உணவுக் கலவை மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பொதுவாகவே சமோசா மற்றும் மஞ்சூரியன் மக்களுக்கு பிடித்த ஒன்றாகும். ஆனால், சாலையோர வியாபாரி ஒருவர் இதை இரண்டையும் கலந்து ஒரு புதுவித உணவுக்கலவையை வழங்குகிறார். இந்த வீடியோவை சாய் என்பவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். கடந்த 10 ஆம் தேதி பகிர்ந்த இந்த வீடியோ 20 லட்சத்திற்கும் அதிகமான பார்வையாளரக்ளை கடந்துள்ளது.
Please follow and like us: