பள்ளி மாணவர்களை நல்வழிப்படுத்த சென்னை காவல்துறை கொண்டு வந்த சிற்பி திட்டத்தின் நிறைவு விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, இந்தியாவில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு நம்பர் 1 ஆக உள்ளது என கூறும் வகையில் நாம் வளர்ந்து வருகிறோம். கல்வித்துறையில் காலை சிற்றுண்டி திட்டம் உள்ளிட்ட பல மகத்தான சாதனைகளை செய்து வருகிறோம். இல்லம் தேடி கல்வி, நான் முதல்வன் திட்டங்களை மிக சிறப்பாக செய்து வருகிறோம்.
மேலும், மாணவர்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படிக்க வேண்டும். மாணவர்கள் எந்த வித போதை பழக்கத்துக்கும் அடிமை ஆக கூடாது. அதேபோல் தங்களது நண்பர்களையும் போதை பழக்கத்துக்கு அடிமையாக விடக்கூடாது. ஐஏஎஸ், ஐபிஎஸ் பணிகளுக்கு வழங்கும் பயிற்சியை மாணவர்களுக்கு வழங்கி வருகிறோம்.
NEWS EDITOR : RP
Please follow and like us: