திருவாரூர் திருத்துறைப்பூண்டி; தமிழகத்துக்கு வர வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.திருத்துறைப்பூண்டியில் தமிழ்நாடு அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி ஆர்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது.
அனுமதி நீடாமங்கலத்தில் நெல்ஜெயராமன் பாரம்பரிய விதை உற்பத்தி மையத்துக்கு அனுமதி கொடுத்த தமிழக அரசு, அதில் உற்பத்தி செய்யக்கூடிய விதை நெல்லை விற்பனை செய்வதற்கான அனுமதி வழங்காமல் நிலுவையில் உள்ளது. எனவே உடனடியாக அனுமதி வழங்க வேண்டும். நெல் ஜெயராமன் நினைவாக திருத்துறைப்பூண்டியில் பாரம்பரிய வேளாண்மை கருத்தரங்க கூடம் அமைக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.மேட்டூர் அணையிலிருந்து காவிரி பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதை வரவேற்கிறோம். கர்நாடகாவில் இருந்து தமிழகத்துக்கு வர வேண்டிய 9 டி.எம்.சி. தண்ணீரை உடனே வழங்க வேண்டும்.
செறிவூட்டப்பட்ட அரிசி பாரம்பரிய முறையில் உற்பத்தி செய்யக்கூடிய அரிசி உள்ளிட்ட உணவு பொருட்களை மருத்துவமனைகள் ஊட்டச்சத்து மையங்களில் கட்டாய உணவுப் பொருளாக பயன்படுத்த தமிழ்நாடு அரசு கொள்கை முடிவு எடு்க்க வேண்டும்.வேளாண் சார்ந்த தொழிற்சாலைகளை உருவாக்கி மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை உற்பத்தி செய்ய வேண்டும். அதனை ஏற்றுமதி செய்வதற்கான ஏற்றுமதி முனையங்களையும், கட்டமைப்புகளையும் மாவட்டம்தோறும் உருவாக்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.2023-ம் ஆண்டை தேசிய சிறுதானிய ஆண்டாக அறிவித்துவிட்டு, பொது வினியோக திட்டத்தில் செறிவூட்டப்பட்ட அரிசியை அனுமதிப்பது இயற்கைக்கு முரணானது. செறிவூட்டப்பட்ட அரிசி வினியோகம் செய்வதை கைவிட வேண்டும். இவ்வாறு அவர் கூறினாா்.
NEWS EDITOR : RP