பெரியகுளம் அருகே நீர் நிலைகளில் குப்பைகளை கொட்டி ஊராட்சி நிர்வாகம் மாசுபடுத்தி வருகிறது. இதனை தடுக்கும் வகையில் நடவடிக்கை எடுக்குமாறு அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தேனி பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில் நாள்தோறும் குப்பைகள் சேகரிக்கப்பட்டு ஊரின் அருகே உள்ள குளத்தின் உட்பகுதி மற்றும் குளக்கரையோரங்களில் கொட்டுவதால் சுற்றுசூழல் மாசு எற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
நீர் நிலைகளை தொடர்ந்து மாசடைய செய்யும் செயல்களில் ஊராட்சி நிர்வாகம் ஈடுபட்டு வருவதாக விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். மேலும் குப்பைகளை கொட்டி திடக்கழிவு மேலாண்மை செய்ய தனியாக இடம் ஒதுக்கியும் அதை நடை முறைப்படுத்தாமல் குப்பைகளை சாலையின் ஓரத்திலும் , குளத்திலும் கொட்டி தீயிட்டு எரிப்பதால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதோடு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டிய ஊராட்சி நிர்வாகமே குளத்தில் குப்பைகளை கொட்டி தீ வைப்பதை தடுத்து நிறுத்தி நீர் நிலைகளை பாதுகாக்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
NEWS EDITOR : RP