இஸ்ரேலில் இருந்து 240 பேரை பணய கைதிகளாக காசாமுனைக்கு ஹமாஸ் கடத்தி சென்றது. இந்நிலையில், காசாமுனையில் உள்ள பணய கைதிகளில் 100க்கும் மேற்பட்டோரை ஒப்பந்த அடிப்படையில் ஹமாஸ் விடுதலை செய்துள்ளது. ஆனால், இன்னும் 129 பேர் காசாவில் பணய கைதிகளாக உள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. பணய கைதிகளை மீட்கும் நடவடிக்கையில் இஸ்ரேல் ஈடுபட்டு வருகிறது. காசா முனையில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையேயான போர் இன்று 87வது நாளாக நீடித்து வருகிறது. இந்நிலையில், இஸ்ரேல் ஹமாஸ் போரில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 23,000 கடந்துள்ளது. இஸ்ரேலில் ஹமாஸ் ஆயுதக்குழுவினர் நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,147 பேர் கொல்லப்பட்டனர்.
Please follow and like us: