மலையாள நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘2018’. கடந்த மே 5-ஆம் தேதி வெளியான இப்படத்தை ஜூட் ஆண்டனி ஜோசப் இயக்கியுள்ளார். கேரளாவில் கடந்த 2018-ம் ஆண்டு நிகழ்ந்த பெருமழை, வெள்ளம் குறித்த இந்த படத்தில் டோவினோ தாமசுடன் இணைந்து ஆசிஃப் அலி, குஞ்சாகா போபன், வினீத் ஸ்ரீனிவாசன், அபர்ணா பாலமுரளி, லால், கலையரசன், நரேன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சூப்பர் ஹிட்டான இந்தப் படம், ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனைப் படைத்தது. தமிழிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெற்றது.
இதைத்தொடர்ந்து ஜூட் ஆந்தணி ஜோசப் லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க இருப்பதாக சமீபத்தில் அறிவிப்பு வெளியாகி இருந்தது. இதற்காக நடிகர் பல விக்ரம், விஜய் சேதுபதி, கிச்சா சுதீப், நிவின் பாலி மற்றும் ராஷ்மிகா மந்தனா ஆகியோரிடம் ஆந்தணி ஜோசப் பேச்சில் ஈடுபட்டுள்ளார்.
NEWS EDITOR : RP