ஹீரோ, வில்லன், கெஸ்ட் ரோல் என எது கொடுத்தாலும் விஜய் சேதுபதியின் நடிப்பு ரசிகர்களை அசர வைக்கிறது. தமிழில் பிஸியாக நடித்து வந்தாலும் தெலுங்கு மற்றும் பாலிவுட்டிலும் அடுத்தடுத்த படங்களை கைவசம் வைத்துள்ளார். சமீபத்தில் விஜய்சேதுபதி நடிப்பில் மாநகரம் திரைப்படத்தின் இந்தி ரீமேக் ஆன மும்பைகார் திரைப்படம் வெளியானது குறிப்பிடத்தக்கது. மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை இயக்குநர் ஸ்ரீராம் ராகவன் இயக்குகிறார்.
இதனையடுத்து தற்போது மெரி கிறிஸ்துமஸ் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் விஜய் சேதுபதி, கத்ரீனா கைஃப் ஆகியோருடன் ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். சைக்கோ திரில்லர் படமாக உருவாகியுள்ள மெரி கிறிஸ்துமஸ், டிசம்பர் 15ம் தேதி கிறிஸ்துமஸ் ஸ்பெஷலாக திரைக்கு வரும் என படக்குழு தற்போது அறிவித்துள்ளது.
2018ல் ஸ்ரீராம் ராகவன் இயக்கத்தில் ஆயுஷ்மான் குரானா, தபு, ராதிகா ஆப்தே நடிப்பில் இந்தியில் வெளியான ‘அந்தாதூன்’ திரைப்படமானது எவரும் எதிர்பார்த்திராத அளவில் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும், இந்தப் படம் 3 தேசிய விருதுகளையும் வென்றது.
NEWS EDITOR : RP