நடிகர் கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான திரைப்படம் ‘சர்தார்’. இரும்புத்திரை, ஹீரோ ஆகிய படங்களின் இயக்குநர் பி.எஸ்.மித்ரன் இயக்கியுள்ள இத்திரைப்படத்தில் ரஜிஷா விஜயன், ராஷி கண்ணா, லைலா உள்ளிட்ட பல திரை நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். தண்ணீர் பிரச்னையை பேசி, கலவையான விமர்சனத்தை பெற்ற இந்த படம் கடந்த ஆண்டு வெளியான படங்களில் பெரிதும் பேசப்பட்ட படமாகும்.
இப்படம் ரூ.80 கோடிக்கும் அதிகமாக வசூலித்ததாக தகவல்கள் வெளியாகின. இந்த படத்தை தயாரித்த பிரின்ஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மற்றும் விநியோகித்த ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனங்களுக்கு நல்ல லாபத்தை கொடுத்ததால் சர்தார் படத்தின் இரண்டாம் பாகத்தை உருவாக்க தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்திருப்பதாக சினிமா வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.
இந்நிலையில், இப்பாகத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க பி.எஸ்.மித்ரன் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் இப்பாகத்தில் வில்லனாக நடிகர் விஜய் சேதுபதியை நடிக்க வைக்கவும் திட்டமிட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் நடிகர் கார்த்தி நடித்து வரும் ஜப்பான் படத்தில் வில்லனாக விஜய் சேதுபதியே நடிக்க வேண்டியிருந்தது.
NEWS EDITOR : RP