தமிழ்நாட்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு தேர்வுகளில் தொகுதிவாரியாக முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ-மாணவிகளை நடிகர் விஜய் நேரில் அழைத்து ஊக்கத்தொகை வழங்கினார். இதற்கான நிகழ்ச்சி நீலாங்கரையில் ஆர்.கே.கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்றது.
இந்த விழாவில் சுமார் 1500 மாணவ, மாணவிகள் மற்றும் அவர்களின் பெற்றோர்கள் கலந்து கொள்கின்றனர். அதேசமயம் பொருளாதாரத்தில் பின்தங்கிய நிலையில் கல்வி பயின்று அதிக மதிப்பெண்கள் எடுத்த மாணவ மாணவிகளுக்கும் நடிகர் விஜய் ஊக்கத்தொகை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு வெள்ளை சட்டையில் வந்த விஜய்யை கண்ட அனைவரும் அரங்கமே அதிர கூச்சலிட்டு அவரை வரவேற்றனர். பின்னர் நிகழ்ச்சியில் மாணவர்களிடம் பேசிய விஜய், தொடர்ந்து மாணவ மாணவிகளுக்கு சான்றிதழ் வழங்கினார்.
கோயம்புத்தூர் மாவட்டம் கிணத்துக்கடவு பகுதியை சேர்ந்த மாணவி ஆர்த்தி 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் 600க்கு 547 மதிப்பெண்களைப் பெற்றுள்ளார். சக்கர நாற்காலியில் படித்தபடி இருந்த அவருக்கு நடிகர் விஜய் மாணவி இருந்த இடத்திற்கே மேடையை விட்டு இறங்கி சென்று சான்றிதழ் வழங்கினார். இந்த நிகழ்வு காண்போரை நெகிழ செய்தது.
NEWS EDITOR : RP