த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் பௌன்சர்கள் தான் பாதுகாப்பு கொடுத்து வருகின்றனர். இதற்கான ஏற்பாட்டினை புஸ்சி ஆனந்த் செய்து வருகிறார். இந்த நிலையில், விஜய் கலந்து கொள்ளும் ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் இந்த பௌன்சர்களால்தான் பிரச்சனை வெடிக் கிறது.
கட்சி அலுவலகத்தில் சமீபத்தில் நடந்த நிகழ்ச்சியின் போது பௌன்சர்களால் பத்திரிகையாளர்கள் தாக்கப்பட்டனர். கட்சி நிர்வாகிகள் கூட அரங்கத்துக்குள் செல்ல முடியாத அளவுக்கு பௌன்சர்கள் தடுத்த போது, அவர்களூடன் நிர்வாகிகள் மல்லுக்கட்டிய சம்பவமும் நடந்தது.
அண்மையில், சென்னை ராயப்பேட்டை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடந்த இஃப்தார் நோன்பு திறக்கும் விழாவில் விஜய் கலந்துகொண்டார். இதில் கலந்து கொண்டிருந்த முஸ்லீம்களை பௌன்சர்கள் தாக்கியிருக்கிறார்கள். இதனால் அந்த நிகழ்ச்சியிலேயே இதுபற்றி தகராறு ஏற்பட்டிருக்கிறது. இதில் விஜய் மீது கோபமடைந்துள்ள முஸ்லீம்கள், தற்போது விஜய் மீது ஆக்சன் எடுக்க வேண்டும் என போலீசில் புகார் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், பௌன்சர்களால் விரும்பத்தகாத சம்பவங்கள் நடப்பதை அறிந்த விஜய், இது பற்றி புஸ்சி ஆனந்திடம் கடிந்து கொண்டிருக்கிறார்.
அத்துடன், இனி தனது நிகழ்ச்சியில் பௌன்சர்கள் பாதுகாப்பு வேண்டுமா? என்று கேள்வி எழுப்பியிருக்கிறார். அதற்கு புஸ்சி ஆனந்த், பௌன்சர்கள் பாதுகாப்பு இல்லையெனில், நீங்கள் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியை ஒழுங்குபடுத்த முடியுமான்னு தெரிய வில்லை என ஆனந்த் சொல்லியிருக்கிறார். அதனால், பௌன்சர்களை நீக்கலாமா? அல்லது நீடிக்கட்டுமா? என்கிற குழப்பத்தில் இருக்கிறாராம் விஜய்.
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை ஆரம்பித்து 1 வருடம் கூட ஆகிவிட்டது. கடந்த பிப்ரபவரியில் தொடங்கப்பட்ட இந்த கட்சியில் பல அரசியல் ரீதியான சிக்கல்கள் நிலவி வருகிறதாம். முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. பெரிய அளவில் இது தொடர்பாக விஜய்க்கும் முக்கியமான சில தகவல்கள் சென்றுள்ளதாம். சமீபத்தில் விஜயின் கட்சியில் ஆதவ் அர்ஜுனா இணைந்தார். த.வெ.க.வின் தேர்தல் வியூகம் அமைக்கும் பணிகளை முன்னெடுக்கிறது ஆதவ் அர்ஜுனாவின் வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனம். இதற்கான ஒப்பந்தத்தில் த.வெ.க. தலைவர் விஜய்யும், வாய்ஸ் ஆஃப் காமன் நிறுவனத் தலைவர் ஆதவ் அர்ஜுனாவுக்குமிடையே நேற்று அக்ரிமெண்ட் கையெழுத்தாகியுள்ளது. ஏற்கனவே, த.வெ.க.வின் தேர்தல் வியூக வகுப்பாளராக செயல்பட்டு வந்த ஜான் ஆரோக்கியசாமி, கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த் முன்னிலையில் இந்த அக்ரிமெண்ட்டில் சைன் பண்ணியிருக்கிறார் விஜய்.
ஆனால் இவரை தவிர பிரபல முகங்கள் யாரும் கட்சியில் இணையவில்லை. முக்கியமாக இக்கட்சியில் புதிதாக நிர்வாகிகள் யாரும் இணையவில்லை. கமல் கட்சி தொடங்கிய போது மநீமவில் கொத்து கொத்தாக நிர்வாகிகள் பலர், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகள் பலர் இணைந்தார். ஆனால் தவெகவில் அப்படி இல்லை. முதல் கட்டமாக தமிழக வெற்றி கழகத்தில் உட்கட்சி பூசல் உள்ளது. மேலே இல்லை என்றாலும் மாவட்ட அளவில் உள்ளூர் அளவில் மோதல் உள்ளது. உள்ளூர் அளவில் இப்போதுதான் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டு வருகின்றனர். இதை அங்கே இருக்கும்.. பதவி எதிர்பார்த்து காத்திருந்த மற்ற நிர்வாகிகள் ஏற்கவில்லை . இதனால் கொடி ஏற்றுவது தொடங்கி போஸ்டர் அடிப்பது வரை பல மோதல்கள் நடக்கின்றன. ஒரே மாவட்டத்தில் பல விஜய் ரசிகர் குழுக்கள் இருக்கும். மன்றங்கள் ஒன்று என்றாலும் குழுக்களாக இவர்கள் பிரிந்து இருப்பார்கள். இதன் காரணமாகவே இவர்களுக்கு இடையே பதவி பெறுவதில் பூசல் நிலவி வருகிறதாம்.