ரௌடி பிக்சர்ஸ் – நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் தயாரித்து இயக்குநர் பி.எஸ் வினோத் ராஜ் இயக்கத்தில் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா இசையில் உருவான படம் கூழாங்கல். கூழாங்கல் படத்தின் படக்குழுவினர் கலந்து கொண்ட செய்தியாளர் சந்திப்பு சென்னை சாலிகிராமம் பிரசாத் லேப்பில் நடைபெற்றது. இந்தநிகழ்ச்சியில் இயக்குநர்கள் விக்னேஷ் சிவன் & பி.எஸ் வினோத் ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர்.
இது எங்கள் முதல் படம். ரௌடி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மூலமாக வித்தியாசமான, புதுமையான நல்ல படங்களை தயாரிக்கலாம் என்று நினைத்து துவங்கியது. அப்போது இந்த படத்தை பார்த்தோம். இந்த படத்தை சர்வதேச திரைப்பட விழாக்களில் கொண்டு சேர்த்தால் சர்வதேச அளவில் ரசிகர்கள் இந்த மாதிரியான படங்களை கொண்டாடுவார்கள். நிறைய விஷயங்கள் புதிதாகவும், மனநிறைவும் இருக்கும். நானும் நிறைய சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு சென்றிருக்கிறேன்.
கேன்ஸ் திரைப்பட விழா போன்ற மற்ற சர்வதேச திரைப்பட விழாக்களுக்கு செல்லும் போது அவர்களின் சினிமா ரசனை வேறு மாதிரி இருக்கும். அந்த மாதிரியான திரைப்படங்களை தயாரிக்க வேண்டும் என்பது என் தனிப்பட்ட ஆசை. எங்களுக்கு அதிகமான பெருமையை ஈட்டு கொடுத்த படம் தான் இது.
நாங்கள் எந்த திரைப்பட விழாக்களுக்கு அனுப்பினாலும் ஏதாவது ஒரு விருதை வாங்கி கொண்டு இருக்கும். அதிலும் ஆஸ்காருக்கான தேர்வுக்கு இந்த படம் பரிந்துரையில் இருந்தது ரொம்ப சந்தோஷம். அதிலும் முதல் படத்துக்கு இப்படியொரு அங்கீகாரம் கிடைத்தது ரொம்ப சந்தோஷம். இப்படடம் வாழ்நாளில் மறக்க முடியாத சந்தோஷத்தை பெபல்ஸ் கொடுத்தது. கேன்ஸ் ஃபிலிம் பெஸ்டிவலில் கூட என்னை கூழாங்கல் தயாரிப்பாளர் என்று தான் அறிமுகப்படுத்தினேன்.
இது ரொம்ப கஷ்டப்பட்டு எடுத்த படம். இயக்குநர் வினோத் பார்த்த, உணர்ந்த விஷயங்களை வைத்து எடுத்த படம். இந்த படத்தை மணிரத்னம் சார் பார்த்து விட்டு, இந்த மாதிரி சினிமாவை நீங்கள் தயாரித்தது பெருமையாக இருக்கிறது என்று பாராட்டினார். அதேபோல் இயக்குநர் வெற்றிமாறனும் இந்த படத்தை பார்த்து பாராட்டினார்.இந்த ஒரு படத்தின் மூலம் எங்களுக்கு கிடைத்த பாராட்டுக்கள் மற்றும் அனுபவங்களை மறக்க முடியாது என்றும், இதை தியேட்டர்களில் கொண்டு வர வேண்டும் என்று ஆசை. ஆனால் சில காரணங்களால் தள்ளி போய் கொண்டு இருக்கிறது. இந்த படத்தின் ரசிகர்களுக்காக சர்வதேச தரத்தில் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சோனியில் வெளியிட்டோம்.
NEWS EDITOR : RP