இது தொடர்பாக அவர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அதில் விக்னேஷ் சிவனின் டி-ஷர்டில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி கையொப்பமிடுகிறார். பின்னர் தோனியின் கையை பிடித்து விக்னேஷ் சிவன் முத்தமிடுகிறார். இந்த வீடியோவை பதிவிட்டுள்ள விக்னேஷ் சிவன், “என் ஹீரோ, என் கேப்டன், என் ரோல் மாடலுடன்! தோனியுடன் இருப்பது எப்போதும் உணர்ச்சிப்பூர்வமானது.
நான் மிகவும் நேசிக்கும் தினமும் பார்க்கும் ஒருவர். அவரது முகத்தில் சிரிப்பை பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. திரைப்படம் தயாரிக்க தமிழ் திரையுலகை அவர் தேர்தெடுத்தது மிக்க மகிழ்ச்சி. திரையரங்குகளில் அவரது படத்தை பார்ப்பதன் மூலம் அன்பையும் ஆதரவையும் வழங்க தயாராக இருக்கிறோம். தமிழ் சினிமாவை தேர்வு செய்ததற்கு நன்றி சாக்ஷி மேடம்” என நெகிழ்ச்சிபட பதிவிட்டுள்ளார். தோனி தயாரிக்கும் புதிய படமான ‘எல்ஜிஎம்’ படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த 10-ம் தேதி சென்னையில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP