பொது மக்களிடையே வித்தியாசமான உணவுகளின் மீது உள்ள ஆர்வம் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, குலோப் ஜாமுன் ஐஸ்கிரீம், குலோப் ஜாமுன் பர்கர், குலோப் ஜாமுன் சமோசா, ஐஸ்கிரீம் மசாலா தோசை, ஐஸ்கிரீம் நூடுல்ஸ், ஐஸ்கிரீம் இட்லி போன்ற விநோதமான உணவு கலவைகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியது.அந்த வகையில், தற்போது சாக்லேட் வெஜிடபிள் ரைஸ் இணையத்தில் வைரலாகி வருகிறது. பீட்டர் ஹென்ட்செபீட்டர் என்பவர் சாக்லேட் வெஜிடபிள் ரைஸ் என்னும் வினோதமான உணவை சமைக்கும் வீடியோவை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார். அதில் அவர் சாக்லேட் குக்கீகளை தண்ணீரில் உருக்கி, அதில் காய்கறிகள், பட்டானி போன்றவற்றை வடித்த சாதத்துடன் கலந்து அந்த சாக்லேட் வெஜிடபிள் ரைஸை தயாரித்தார்.
Please follow and like us: