‘பரியேறும் பெருமாள்’, ‘கர்ணன்’ படத்தைத் தொடர்ந்து இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கி உள்ள திரைப்படம் ‘மாமன்னன்’. உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் தயாரிக்கும் இப்படத்தில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார். உதயநிதி ஸ்டாலின் மற்றும் வடிவேலு ஆகியோர் பிரதான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். முக்கிய கதாபாத்திரத்தில் மலையாள நடிகர் ஃபஹத் பாசில் நடிக்கிறார். இத்திரைப்படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார் அண்மையில் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு நிகழ்வு நடைபெற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவில் படம் உருவாகி உள்ளது.
இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தொடங்கி அண்மையில் வெளியான பாடல்கள் வரையில் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.
மாமன்னன் திரைப்படத்தின் ட்ரெயிலர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகவுள்ளதை சிறப்பு போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில் வடிவேலு மற்றும் உதயநிதியின் முகம் சரிபாதியாக இடம்பெற்றுள்ளது. கபிலன் செல்லைய்யா மாமன்னன் திரைப்படத்தின் போஸ்டர் வடிவமைப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP