சினிமா, டிவி சீரியல் என பார்த்து வந்த ரசிகர்கள் தற்போது வெப் தொடர்களை அதிகமாக பார்க்க தொடங்கியுள்ளனர். இதனால் வெப் தொடரை தயாரிக்க ஏராளமான நிறுவனங்கள் களத்தில் குதித்துள்ளன. முக்கிய நடிகர்கள், இயக்குநர்கள், இசையமைப்பாளர் கூட வெப்தளத்தில் தங்களது பங்களிப்பை அளிக்க தொடங்கியுள்ளனர்.
நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் கடந்த 8ஆம் தேதி ‘நெவர் ஹேவ் ஐ எவர்’ என்ற தொடர் வெளியானது. இதனை மிண்டி கலிங் இயக்கியுள்ளார். . மைத்ரேயி ராமகிருஷ்ணன் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் ஒருவர், அமெரிக்காவில் பள்ளியில் படித்த போது எதிர்கொள்ளும் பிரச்னைகள் தான் தொடரின் மையக்கதை.
இந்த தொடரின் நான்காவது சீசனில் விஜய் நடித்த தெறி படத்தில் இடம்பெற்ற உன்னாலே எந்நாளும் என் ஜீவன் வாழுதே என்ற பாடல் இடம்பெற்றுள்ளது. இதனை கொண்டாடி தீர்க்கும் விஜய் ரசிகர்கள், இணையத்தில் பகிர்ந்தும் வருகின்றனர். இதன் மற்றொரு எபிசோடில் புஷ்பா படத்தில் வரும் சாமி சாமி பாடலும் இடம்பெற்றுள்ளது.
NEWS EDITOR : RP