காஸாவில் போர் நிறுத்தம் கோரி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா புறக்கணித்தது..!!

Spread the love

கடந்த ஆண்டு அக்.7-ஆம் தேதி இஸ்ரேல் மீது சுமார் 5,000 ஏவுகணைகளை சரமாரியாக வீசி ஹமாஸ் அமைப்பினர் தாக்குதல் நடத்தினர்.  அந்த நாட்டுக்குள் அதிரடியாக ஊடுருவி சுமார் 1,200 பேரை படுகொலை செய்தனர்.  அத்துடன்,  200-க்கும் மேற்பட்ட பெண்கள், குழந்தைகள்,  முதியவர்கள், ராணுவத்தினரை ஹமாஸ் அமைப்பினர் காஸாவுக்குள் கடத்திச் சென்றனர்.  இதனைத் தொடர்ந்து, 6 மாத காலமாக இஸ்ரேல் – காஸா இடையே போர் நடந்து வருகிறது.  இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் இதுவரை 33 ஆயிரத்தும் அதிகமான பாலஸ்தீனர்கள் உயிரிழந்துள்ளனர்.இந்த நிலையில், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இஸ்ரேலுக்கு எதிராக நேற்று (ஏப். 5) 4 தீர்மானங்கள் கொண்டுவரப்பட்டன.  அதில் 3 தீர்மானங்களை ஆதரித்து இந்தியா வாக்களித்தது.  காஸாவில் உடனடியாக போர் நிறுத்தம் ஏற்படுவதை உறுதிசெய்ய வலியுறுத்தி ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை இந்தியா வாக்களிக்காமல் புறக்கணித்தது.இஸ்ரேலுக்கு ஆயுதங்கள், வெடிமருந்துகள் மற்றும் பிற ராணுவ உபகரணங்கள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தக் கோரியும், போர்க்குற்றங்களுக்கு நீதி கோரியும் வலியுறுத்தப்பட்டது.  பாலஸ்தீன மக்களுக்கு அடிப்படைத் தேவைகளையும்,  அவசர உதவிகளை வழங்குதல் உள்ளிட்டவைகள் தீர்மானத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன.

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram