உதகை மலை ரயில் தினந்தோறும் மேட்டுப்பாளையத்தில் இருந்து காலை 7.10 மணி அளவில் புறப்பட்டு பகல் 12.30 மணி அளவில் உதகை சென்றடையும். இந்நிலையில், மேட்டுப்பாளையம்- உதகை மலை ரயில் உதகை ரயில் நிலையம் அருகே வந்தபோது தண்டவாளத்தில் நடந்து சென்ற எருமைகள் மீது மோதியது. ரயில் மோதியதில் ஒரு எருமைமாடு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது. மற்றொரு எருமை படுகாயம் அடைந்தது. இதனால், ரயிலின் ஒரு பெட்டி தடம் புரண்டது .
Please follow and like us: