வேலூர், வசந்தபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் பச்சையப்பன் மற்றும் சுதாகர்.இவர்கள் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு இருசக்கர வாகனங்களை மர்ம நபர்கள் திருடி சென்றனர் .இது குறித்து வாகன உரிமையாளர்கள் இருவரும் தனித்தனியே வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
புகாரின் அடிப்படையில், வேலூர் மாவட்ட காவல் நிலையத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்ட காவல் கட்டளை கட்டுப்பாடு மற்றும் பதிலளிக்கும் மையம் மூலம் சுமார் 100 சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர்.
இதன் மூலம் டூவீலர்களை திருடிய கும்பல் குறித்து அடையாளம் காணப்பட்டது. பின்னர், டூவீலர்களை திருடி சென்ற அரவிந்தன்(20), சந்தோஷ்(23), பிரதீப்(23), சுல்தான்(18) ஆகியோரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் திருடப்பட்ட இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
NEWS EDITOR : RP