சோபியான் மாவட்டத்தின் அல்ஷிபோரா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக இன்று காலை கிடைத்த தகவலை அடுத்து பாதுகாப்புப் படையினர் அங்கு விரைந்து சென்று தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி உள்ளனர். இதையடுத்து, பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் இரண்டு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக ஜம்மு காஷ்மீர் மாநில காவல்துறை தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: