மேற்கு வங்கம் மாநிலம் பாங்குரா பகுதியில் உள்ள ஓண்டோ ரெயில் நிலையம் அருகில் இன்று அதிகாலை 4 மணி அளவில் இரண்டு சரக்கு ரெயில்கள் நேருக்கு நேர் மோதியதில் 12 ரெயில் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது
இந்த விபத்தில் ஒரு ரெயிலில் இருந்த ஓட்டுனருக்கு லேசான காயம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. ரெயில் பெட்டிகளை மீட்டு பாதையை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இரண்டு ரெயில்களும் காலியாக இருந்ததால் பெரிய சேதம் தவிர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விபத்தின் காரணமாக கரக்பூர் – பாங்குரா – ஆத்ரா வழித்தடத்தில் ரெயில் போக்குவரத்து தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: