கோவையை சேர்ந்தவர் டிடிஎப் வாசன். இவர் தன்னுடைய அதிவேக பைக்கில் 140 முதல் 180 கிலோ மீட்டர் வேகத்திற்கு மேல் சென்று, அதை தனது செல்போனில் லைவ் வீடியோவாக எடுப்பது வாடிக்கை. போக்குவரத்து விதிகளில் புதிய சட்ட திருத்தங்களை கொண்டு வந்து அபராத தொகையை பலமடங்காக அதிகரித்து பல ஆயிரம் அபராதம் விதித்து வருகின்றனர்.
ஆனால் டிடிஎப் வாசன் மட்டும் ஏனோ இந்த போக்குவரத்து விதிகளுக்கு அப்பாற்பட்டவராகவே தன்னை கருதிக்கொண்டு அதிவேக பயணம் மேற்கொண்டு சமூக வலைத்தளத்தில் பதிவிடுவதை வழக்கமாகவே வைத்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு கடலூர் புதுப்பாளையம் பகுதியில் திரைப்பட இயக்குனர் ஒருவரின் அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக யூடியூபர் டி.டி.எப் வாசன் கடலூர் வருகை புரிந்தார். அப்போது அவரை காண ஏராளமான பைக் பிரியர்கள் அந்த இடத்தில் குவிந்ததால் கடும் போக்குவரத்துக்கு நெரிசல் ஏற்பட்டது.
இந்த நிலையில் டி.டி.எப் வாசன் தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். அதன்படி, உதகையில் பிரபல யூட்டியூபர் டிடிஎஃப் வாசனுக்கு ஆயிரம் ரூபாய் அபராத விதித்து புதுமந்து காவல் துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
விலை உயர்ந்த இருசக்கர வாகனத்தை உதகையில் அதிவேகமாக இயக்கியதாக டிடிஎப் வாசனை மடக்கி பிடித்த புதுமந்து காவல்துறையினர் அதிவேகமாகவும் அஜாக்கிரதையாகவும் வாகனத்தை இயக்கியதாக மோட்டார் வாகன சட்டத்தின் படி வழக்கு பதிவு செய்து ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து எச்சரித்து அனுப்பி வைத்துள்ளனர்.
NEWS EDITOR : RP