மராட்டிய மாநிலம் யவத்மாலில் உள்ள நாக்பூர்-துல்ஜாபூர் நெடுஞ்சாலையில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியே வந்த லாரியை சோதனை செய்தனர். சோதனை செய்து கொண்டிருக்கும்போது திடீரென எதிரே வந்த மற்றொரு லாரி போலீஸ் வேன் மீது மோதியது.
இந்த விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே போலீஸ் அதிகாரி மற்றும் விபத்தை ஏற்படுத்திய லாரியின் டிரைவர் உயிரிழந்தனர். மேலும் இரண்டு போலீஸ் அதிகாரிகள் பலத்த காயம் அடைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விபத்தில் சிக்கி உயிரிழந்த இருவரது உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் படுகாயமடைந்த இரண்டு போலீஸ் அதிகாரிகளையும் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பினர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
NEWS EDITOR : RP