மௌனம் பேசியதே, சாமி, கில்லி, திருப்பாச்சி, ஆறு, குருவி, விண்ணைதாண்டி வருவாயா, 96 உள்ளிட்ட பல படங்களில் நடித்து தனக்கான ரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி கொண்டவர் திரிஷா. சமீபத்தில் இயக்குனர் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது.
தொடர்ந்து திரிஷா தற்போது லியோ படத்தில் விஜய் ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படம் அக்டோபர் மாதம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. த ரோடு படமும் கைவசம் உள்ளது. தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படத்தில் நடிக்கவும் திரிஷா ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த நிலையில் திரிஷா அடுத்ததாக மலையாள நடிகர் டோவினோ தாமசுடன் ஜோடி சேர்ந்துள்ளார். அகில் பால் – அனஸ்கான் ஆகிய இரண்டு இயக்குனர்களும் இணைந்து இயக்கும் திரைப்படம் ‘ஐடென்டிட்டி’. இந்த படத்தில் டோவினோ தாமசுக்கு ஜோடியாக திரிஷா நடிக்கிறார். இதனை படக்குழு போஸ்டர் ஒன்றை பகிர்ந்து தெரிவித்துள்ளது.
NEWS EDITOR : RP