சென்னை கடற்கரை – எழும்பூர் இடையே 4 கி.மீ தொலைவிற்கு நான்காவது வழிதட
விரிவாக்கம் பணி ரூ.279 கோடி மதிப்பில் 7 மாத காலம் நடைபெற உள்ளது. இதன்
காரணமாக சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் செல்லும் ரயில்கள்
அனைத்தும் வரும் 27 ஆம் தேதி முதல் சிந்தாதிரிப்பேட்டை நிலையத்தில் இருந்து
வேளச்சேரிக்கு இயக்கப்படும்.
தற்போது தினமும் 122 ரயில்கள் சென்னை கடற்கரை – வேளச்சேரி வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. இதன் எண்ணிக்கை 80 ரயில்களாக குறைக்கப்பட்டு சிந்தாதிரிப்பேட்டை பறக்கும் ரயில் நிலையத்தில் இருந்து இயக்கப்படும்
தினமும் 48 புறநகர் ரயில்கள் ஆவடி- சென்னை கடற்கரை- வேளச்சேரி வழித்தடத்தில்
இயக்கப்படுகிறது மற்றும் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை- வேளச்சேரி
வழிதடத்தில் 11 ரயில்கள் இயக்கப்படுகிறது. இதன் சேவை இனி வரும் 27 ஆம் தேதி
முதல் சென்னை கடற்கரை ரயில் நிலையதுடன் நிறுத்தப்படும்.
எழும்பூரில் இருந்து அல்லது மற்ற ரயில் நிலையங்களில் இருந்து வேளச்சேரி
வழித்தடத்தை இணைப்பதற்கு கூடுதல் மாநகர பேருந்து சேவை தேவைப்படும் பட்சத்தில்
வேண்டிய வழித்தடத்தில் கூடுதல் மாநகர பேருந்துகளை இயக்க மாநகர போக்குவரத்து
கழகத்திற்கு தெற்கு ரயில்வே சென்னை கோட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்படும்.
சென்னை கோட்டத்தின் கட்டுப்பாட்டில் உள்ள சென்னை கடற்கரை – வேளச்சேரி வழிதடமான MRTS என்னும் பறக்கும் ரயில் தடத்தை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகத்திற்கு கொடுக்கும் திட்டம் இதுவரை உறுதியாகவில்லை. சென்னையில் ஒரே டிக்கெட்டில் அனைத்து பொது போக்குவரத்தையும் பயன்படுத்தும் திட்டம் தொடர்ந்து ஆய்வில் உள்ளது. இது தொடர்பாக சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் தொடர் ஆய்வுகளை செய்து வருகிறது.
NEWS EDITOR : RP