உத்தரப்பிரதேச மாநிலம் கோண்டாவில் இன்று சண்டிகர்-திப்ரூகர் விரைவு ரயிலின் பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பயணி ஒருவர் உயிரிழந்தார். மேலும் இருவர் படுகாயமடைந்தனர். உத்தரபிரதேசத்தில் கோண்டா மற்றும் ஜிலாஹி இடையே அமைந்துள்ள பிகௌராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. இதையடுத்து, அப்பகுதியில் பயணிகளை மீட்கும் பணியானது தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.12 பெட்டிகளில், 4 ஏசி பெட்டிகள் தரம் புரண்டுள்ளன. தகவல் கிடைத்ததும் மீட்புக் குழுவினர் அங்கு விரைந்துள்ளனர்.
Please follow and like us: