மந்திரவாதி ராம்நிவாஸ் பிரீத்தியையும் பூனத்தையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். ஷாஜகான்பூர் உத்தரபிரதேச மாநிலம் ஷாஜகான்பூரை சேர்ந்த இளம்பெண் பூனம். இவர் தனது தோழி பிரீத்தியை ஆழமாக காதலித்தார். பிரீத்தியும் பூனமும் ஓரினச்சேர்க்கையாளர்கள்.
இந்த நிலையில் பூனம் காரணமாக பிரீத்தியால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை. இதனால் பிரீத்தியின் தாய் ஊர்மிளா லக்கிம்பூர் கேரியில் வசிக்கும் ராம்நிவாஸ் என்ற மந்திரவாதியை சந்தித்து உள்ளார். தனது மகளின் திருமணத்திற்கு பூனம் தடையாக இருப்பதாகவும், அவளை கொலை செய்தால் இரண்டரை லட்சம் ரூபாய் தருவதாகவும் கூறி முன்பணமாக 5 ஆயிரம் கொடுத்து உள்ளார்.
இந்த நிலையில் பிரீத்தியை திருமணம் செய்து கொள்ள விரும்பிய பூனம் தான் ஆணாக மாற அதே சாமியாரை அணுகி உள்ளார். மந்திரவாதி ராம்நிவாஸ் பிரீத்தியையும் பூனத்தையும் காட்டிற்கு அழைத்துச் சென்றார். அங்கு இருவருக்கும் திருமணம் செய்து வைப்பது குறித்து பேசினார். பூனத்தை மந்திரம் செய்து ஆணாக மாற்றுவேன் என்று ராம்நிவாஸ் உறுதியளித்து உள்ளார்.
பின்னர் இதற்காக பூனம் மீண்டும் காட்டுப்பகுதிக்கு தனியாக வர வேண்டும் என்று கூறி உள்ளார்.பூனம் காட்டிற்கு வந்ததும் பூனத்தை தாக்கி கொலை செய்து பின்னர் உடலை அங்குள்ள முட்புதரில் மறைத்து வைத்து உள்ளார்.
இந்த நிலையில் பூனம் காணவில்லை என்ற புகாரின் பேரில் விசாரணை நடத்தி வந்த போலீசார் காட்டில் இருந்து பூனம் உடலை மீட்டு உள்ளனர். பூனத்தின் அண்ணன் பர்விந்தர், தங்கையின் உடையைப் பார்த்து அடையாளம் காட்டி உள்ளார். அவர் அளித்த புகாரின் பேரில், தாக்குதலில் ஈடுபட்ட மந்திரவாதி ராம்நிவாஸ், பிரீத்தி மற்றும் அவரது தாய் ஊர்மிளா ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். ராம்நிவாஸ், பிரீத்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ஊர்மிளாவை போலீசார் தேடி வருகின்றனர்.
NEWS EDITOR : RP