திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை ஒன்றில், கழிவு நீரை சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால், அதிலிருந்து நச்சு வாயு வெளியேறியதாக கூறப்படுகிறது. இதனால் அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல் உபாதைகள் ஏற்பட்டுள்ளதாக தமிழ்செல்வி வேதனை தெரிவித்தார்.
இதுகுறித்து தகவலறிந்த சட்டமன்ற உறுப்பினர்கள் செல்வராஜ், விஜயகுமார் மற்றும் மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ், மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர் உள்ளிட்டோர் ஆய்வு மேற்கொண்டனர். அப்பகுதி மக்களுக்கு நடத்தப்பட்ட மருத்துவ சோதனையில், உடல்நலம் பாதிப்பு உள்ளனாவர்களை கண்டறிந்து மருத்துவமனையில் அனுமதித்தனர். ஆலைக்கு தற்காலிகமாக தடைவித்த மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், ஆலையில் ஆய்வு மேற்கொண்டனர். ஆய்வு அறிக்கையின் படி அடுத்தக்கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி ஆணையாளர் பவன்குமார் கிரியப்பனவர் தெரிவித்தார்.
திருப்பூர் வெங்கமேடு பகுதியில் துணிகளுக்கு சாயம் ஏற்றும் தனியார் ஆலை
செயல்பட்டு வருகிறது. இங்கு துணிகளுக்கு சாயம் ஏற்றப்பட்ட பின்பு கழிவு நீரை
சுத்தகரிக்காமல் வைக்கப்பட்டதால் நீரிலிருந்து வெளியேறிய நச்சு வாயுவால்
அப்பகுதியில் உள்ள குழந்தைகள் உட்பட பெரியவர்களுக்கு வாந்தி உள்ளிட்ட உடல்
உபாதைகள் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாநகராட்சி நிர்வாகத்தின் கவனத்திற்கு வந்த பின்பு மாநகராட்சி
சுகாதாரத்துறை அலுவலர்கள் மூலம் அப்பகுதியில் உடல் உபாதைக்கு உள்ளான
குழந்தைகள் முதல் பெரியவர்களுக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இச்சம்பவம் குறித்து அறிந்த திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் செல்வராஜ்
சம்பவ இடத்திற்கு வந்து மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட குழந்தைகளை தனது வாகனத்தின் மூலம் உடனடியாக தனியார் மருத்துவமனையில் முழு பரிசோதனை மேற்கொள்ள அனுப்பி வைத்தார். இதனை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் கிரியப்பனவர், திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் விஜயகுமார் உள்ளிட்டோர் சம்பந்தப்பட்ட பகுதி மற்றும் ஆலையில் நேரடி ஆய்வு மேற்கொண்டனர்.
இது குறித்து மாநகராட்சி ஆணையாளர் பவன் குமார் “ முதற்கட்டமாக பாதிக்கப்பட்டதாக கூறப்படும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் , எந்த வித பாதிப்புகளும் ஏற்படாத நிலையில் இந்த
பகுதி முழுவதுமே உள்ள அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள
அறிவுறுத்தப்பட்டிருப்பதாகவும், மேலும் சம்பந்தப்பட்ட புகார் தெரிவிக்கப்படும்
ஆலையில் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆய்வு செய்ய உத்தரவிடப்பட்டு
இருப்பதாகவும் அவர்கள் ஆய்வு அறிக்கையின் அடிப்படையில் அடுத்த கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் ஆலையின் கழிவு நீர் மற்றும் சுத்தகரிக்கப்பட்ட நீரினை ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். ஆய்வு முடிவுகள் வரும் வரை ஆலையை தற்காலிகமாக செயல்பட தடை விதித்து மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர்.
NEWS EDITOR : RP