ரேஷன் கடைகளில் இன்று முதல் கிலோ ரூ.60-க்கு தக்காளி

Spread the love

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினின் உத்தரவின்படி, தக்காளி விலையேற்றத்தை கட்டுக்குள் கொண்டுவர பல்வேறு நடவடிக்கைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அண்டை மாநிலங்களில் பெய்த கனமழையினால் தக்காளி விளைச்சல் குறைந்ததால், தக்காளியின் வரத்து குறைந்து காணப்படுகிறது. இதனால் மீண்டும் வெளிச்சந்தையில் தக்காளின் விலை உயர்ந்துள்ளது.

இந்நிலையை கருத்தில் கொண்டு, பொதுமக்கள் பாதிப்படையாமல் தடுக்கும் வகையில் தற்போது தமிழ்நாடு முழுவதும் தக்காளி விற்பனை 302 ரேஷன் கடைகள் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி விற்பனையை 500 ரேஷன் கடைளுக்கு நீட்டிப்பு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

சென்னையில் 100 ரேஷன் கடைகளிலும், கோவை, மதுரை, சேலம், திருச்சி மாவட்டங்களில் 20 கடைகளிலும்; செங்கல்பட்டு, ஈரோடு, தஞ்சாவூர், திருநெல்வேலி, திருவள்ளூர், தூத்துக்குடி, வேலூர் மாவட்டங்களில் 15 கடைகளிலும்; கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, காஞ்சீபுரம், கரூர், கிருஷ்ணகிரி, மயிலாடுதுறை, நாகை, நாமக்கல், பெரம்பலூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், விருதுநகர் மாவட்டங்களில் 10 கடைகளிலும்; அரியலூர், கன்னியாகுமரி, நீலகிரி, ராணிப்பேட்டை, சிவகங்கை, தென்காசி, தேனி, திருப்பத்தூர், திருவாரூர் மாவட்டங்களில் 5 கடைகளிலும் என தமிழ்நாடு முழுவதும் 500 ரேஷன் கடைகளில் 1-ந்தேதி (இன்று) முதல் தக்காளி கிலோ ஒன்றுக்கு ரூ.60 என்ற விலையில் விற்பனை செய்யப்படவுள்ளது.

இந்த விலையேற்றத்திற்குக் காரணம், விளைச்சல் குறைவு மற்றும் பக்கத்து மாநிலங்களில் வரத்து குறைவே ஆகும். இது ஒரு இயற்கையான விலையேற்றமே தவிர, செயற்கையானது அல்ல. முதல்-அமைச்சரின் உத்தரவின்படி தக்காளி விலையை கட்டுக்குள் கொண்டுவர இது போன்ற அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தக்காளியில் செயற்கை தட்டுப்பாடு எதுவும் ஏற்படுத்தப்படவில்லை.

NEWS EDITOR : RP

Please follow and like us:

Spread the love

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

WhatsApp
YouTube
Instagram
Telegram