தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) மூலமாகத் தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளுக்குத் தேவைப்படும் ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். ஆண்டின் இறுதியில் எந்தெந்த பணிகளுக்கு என்னென்ன போட்டித்தேர்வுகள் நடத்தப்படும், தேர்வுக்கான அறிவிப்பு எப்போது வெளியாகும், எழுத்துத் தேர்வு எப்போது நடத்தப்படும், தேர்வு முடிவுகள் வெளியாகும் நாள் ஆகிய விவரங்களை உள்ளடக்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணையை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டு வருகிறது.இந்த கால அட்டவணை வெளியிடுவதால் அரசுப் பணியில் சேர விரும்பும் இளைஞர்கள் போட்டித் தேர்வுகளுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு தயாராகப் பெரிதும் உதவிக்கரமாக இருக்கும். டிசம்பர் 15-ம் தேதி, 2024-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை வெளியாகும் எனத் தகவல் வெளியானது. ஆனால் டிசம்பர் 15 ஆம் தேதி எவ்வித அறிவிப்பும் வெளியாகவில்லை
இந்நிலையில் இன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் தனது 2024-ம் ஆண்டுக்கான தேர்வு அட்டவணையை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி), பணியாளர் தேர்வாணையம் (எஸ்எஸ்சி) ஆகியவை 2024-க்கான தேர்வு கால அட்டவணையை வெளியிட்டுவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.
NEWS EDITOR : RP