தமிழ்நாடு பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் 7வது சீசனில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், கோவை கிங்ஸ், மதுரை பாந்தர்ஸ், திண்டுக்கல் டிராகன்ஸ், நெல்லை ராயல் கிங்ஸ், சேலம் ஸ்பார்டன்ஸ், திருப்பூர் தமிழன்ஸ், பால்சி திருச்சி ஆகிய 8 அணிகள் பங்கேற்கின்றன. ஜூலை 12-ம் தேதி வரை கோயம்புத்தூர், திண்டுக்கல், சேலம், நெல்லை ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறும்.
அந்த வகையில், டி.என். பி.எல். போட்டியின் 5-வது லீக் ஆட்டம் கோவையில் நேற்று இரவு நடைபெற்ற போட்டியில் ஜெகதீசன் தலைமையிலான சேப்பாக் சூப்பர் கில்லீஸ் -சாய்கிஷோர் தலைமையிலான திருப்பூர் தமிழன்ஸ் அணிகள் மோதின. இரு அணிகளுக்கும் இது 2-வது போட்டியாகும்.
டாஸ் வென்ற ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்ய சேப்பாக சூப்பர் கில்லீஸின் அனுபவம் வாய்ந்த பந்துவீச்சாளர்களிடம் சிக்கி ஐடிரீம் திருப்பூர் தமிழன்ஸ் டாப் ஆர்டர்கள் தடுமாறினர். முடிவில் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் திருப்பூர் தமிழன்ஸ் அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 120 ரன்கள் எடுத்தது. சேப்பாக் அணியின் சார்பில் அதிகபட்சமாக ஹரிஷ் குமார் மற்றும் ரஹில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளும் எடுத்தனர்.
இதையடுத்து 121 ரன்களை இலக்காக கொண்ட சேப்பாக்கம் சூப்பர் கில்லீஸ் அணி ஆடியது. சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணியின் சார்பில் முதலில் களமிறங்கிய ஜெகதீசன் மற்றும் பிரதோஷ் ஜோடியில், ஜெகதீசன் 13 (9) ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத்தொடர்ந்து பிரதோஷ் பால் 25 (25) ரன்களும் எடுத்து வெளியேறினர். அதன் பிறகு பாபா அபராஜித் மற்றும் ஹரிஷ் குமார் இருவரும் நிலைத்து நின்று ஆடி சேப்பாக்கம் அணியை வெற்றி பெறச் செய்தனர்.
NEWS EDITOR : RP