மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 100 இடங்களில் சிறப்பு பட்டா முகாம்கள் நடத்துவது தொடர்பாக அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.
அந்த கடிதத்தில், “ஒவ்வொரு மாவட்டத்திலும் துணை கலெக்டர் நிலையிலான அலுவலர் தலைமையில் பட்டா முகாம்கள் நடத்தப்பட வேண்டும். வீட்டுமனை பட்டாக்கள், பட்டா மாறுதல் ஆணைகள் பெற தகுதியான பயனாளிகளுக்கு முறைப்படி பட்டா வழங்க வேண்டும். பட்டா மாறுதல் தொடர்பான மனுக்களை பெற்று அவற்றை உடனுக்குடன் இணைய வழியில் பதிவேற்றம் செய்ய வேண்டும். வருவாய்த்துறை சார்பில் பெறப்படும் மனுக்கள் மீது ஒரு வாரத்திற்குள் தீர்வு காண வேண்டும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
NEWS EDITOR : RP
Please follow and like us: