அஜித்குமார் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் துணிவு திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து, அஜித் தன்னுடைய 62வது படமான ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் நடிகர் அஜித் குமாருக்குடன் இணைந்து அர்ஜூன், ஆரவ், திரிஷா, ரெஜினா கெஸான்ட்ரா உள்ளிட்டோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.கடந்த வாரம் ‘விடாமுயற்சி’ படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. மேலும், இப்படத்தின் டீசர் யூடியூபில் அதிக பார்வையாளர்களை பெற்று நம்.1 டிரெண்டிங்களில் இருந்தது. விடாமுயற்சி திரைப்படம் ஜனவரி மாதம் பொங்கல் பண்டிகை அன்று வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. அஜித் குறித்த ரசிகர்களின் க்யூட் அட்ராசிட்டி தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. கடந்த முறை வலிமை, துணிவு படங்களின் அப்டேட் முதல் கடந்த சில மாதங்களாக கடவுளே அஜித்தே முழக்கங்கள் வரை எந்த விழாவாக இருந்தாலும் அவரது ரசிகர்கள் இந்த முழக்கத்தை எழுப்பி வருகின்றனர்.பொது இடங்களிலும் மக்கள் அதிகம் கூடும் இடங்களிலும் அசௌகரியத்தை ஏற்படுத்தும் இந்த செயலை நிறுத்துவதற்கு உங்கள் ஒத்துழைப்பை நான் அன்புடன் வேண்டுகிறேன். என்னுடைய இந்த கோரிக்கைக்கு உடனடியாக மதிப்பு கொடுப்பீர்கள் என்று நம்புகிறேன். யாரையும் புண்படுத்தாமல் கடினமாக உழைத்து, உங்கள் குடும்பத்தை கவனித்துக் கொள்ளுங்கள் மற்றும் சட்டத்தை மதிக்கும் குடிமக்களாக உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினருக்கும் அழகான வாழ்க்கை அமைய வாழ்த்துக்கள்!” இவ்வாறு நடிகர் அஜித் தெரிவித்துள்ளார்.எனது பெயரைத் தவிர்த்து என் பெயருடன் வேறு எந்த முன்னொட்டும் சேர்த்து அழைக்கப்படுவதில் நான் துளியும் உடன்படவில்லை. எனது பெயரில் மட்டுமே நான் அழைக்கப்பட வேண்டும் என விரும்புகிறேன்.
பொதுவெளியில் அநாகரீமாக, தேவையில்லாமல் எழுப்பப்படும் அஜித்தே என்ற இந்த கோஷம் என்னை கவலையடையச் செய்திருக்கிறது ~ அஜித்..!!
Please follow and like us: