பிரதமர் மோடியை அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி கைகொடுத்து, ஆரத்தழுவி வரவேற்றார். பின்னர் போர் சூழல் குறித்த புகைப்பட காட்சிகளை மோடி பார்வையிட்டார். முன்னதாக கீவ் நகரில் உள்ள காந்தி சிலைக்கு பிரதமர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, ரஷ்ய தாக்குதலில் உயிரிழந்த குழந்தைகளின் நினைவிடத்தில் இரு நாட்டுத் தலைவர்களும் அஞ்சலி செலுத்தினர்.இந்த சந்திப்பு குறித்து உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “இந்தியா – உக்ரைன் நாடுகளுக்கு இடையேயான பேச்சுவார்த்தை மற்றும் உறவுகளை வலுப்படுத்த பிரதமர் மோடியுடனான இந்த சந்திப்பு முக்கியமானது” என பதிவிட்டுள்ளார்.
Please follow and like us: