கர்நாடக மாநிலம், பெங்களூரு வீரபத்ர நகரில் உள்ள பேருந்து பணிமனையில் இன்று காலை 10-க்கும் மேற்பட்ட தனியார் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. இந்த நிலையில், திடீரென்று ஒரு பேருந்து தீப்பிடித்து எரிந்த நிலையில், தீ மளமளவென பரவி அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மற்ற பேருந்துகள் எரியத் தொடங்கியது.இதுகுறித்து சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக உயிரிழப்பு ஏதும் நிகழவில்லை என்றாலும், 10 பேருந்துகள் எரிந்து சேதமடைந்தன. மேலும், இந்த தீ விபத்துக்கான காரணம் குறித்து பெங்களூரு போலீசார் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.
NEWS EDITOR : RP
Please follow and like us: