தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது சென்னை, தேர்தல் வழக்கில் தேனி தொகுதி எம்.பி. ஓ.பி.ரவீந்திரநாத் ஆஜராக சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 2019 மக்களவை தேர்தல் வெற்றியை எதிர்த்து வாக்காளர் மிலானி என்பவர் தொடர்ந்த வழக்கில் ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
வழக்கின் தீர்ப்பு தள்ளிவைக்கப்பட்ட நிலையில் சில விளக்கங்களை நீதிபதி கோரியிருந்தார் . வழக்கை மீண்டும் விசாரித்தால் மட்டுமே ஆவணங்களை சமர்ப்பிக்க முடியும் என ரவீந்திரநாத் கோரிக்கை விடுத்த நிலையில் கோரிக்கையை ஏற்று வழக்கை மீண்டும் விசாரிக்க நீதிபதி எஸ்.எஸ். சுந்தர் ஒப்புதல் அளித்துள்ளார் .
NEWS EDITOR : RP
Please follow and like us: