சென்னை மதுரவாயல் கிருஷ்ணாநகர் 15-வது தெருவில் பிரபல சின்னத்திரை நட்சத்திர ஜோடிகளான நடிகர் ராஜ்கமல், நடிகை லதா ராவ் வீடு உள்ளது. இங்கு கடந்த 9ஆம் தேதி இரவு டிவி , மோட்டார் உள்ளிட்டவை திருடு போனது.
இதேபோல் அடுத்த வீடான பாஜக பிரமுகரின் இல்லத்தில் நிறுத்தி வைக்கபட்டிருந்த காரும் மாயமானது. இதுதொடர்பாக இரு தரப்பினரும் மதுரவாயல் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சிசிடிவி கேமிரா பதிவுகள் மூலம் மர்ம நபர்களை தேடி வந்தனர்.
இதுதொடர்பாக சென்னை பிராட்வேயை சேர்ந்த காஜா மொய்தீன் (38) அமீன் உதீன் (திருவற்றியூர்) ஆகிய இருவரை மதுரவாயல் போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர்களிடம் இருந்து திருடப்பட்ட டிவி மற்றும் காரை பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டனர்.
NEWS EDITOR : RP