திருட்டு வழக்கில் 2 ஆண்டுகள் தலைமறைவாக இருந்த திருடனை ஓமலூர் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
சேலம் ஓமலூர் பேரூராட்சி இரண்டாவது வார்டு புது தெரு பகுதியைச்
சேர்ந்தவர் பூபதி. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவரது வீட்டில் பூஜை
அறை உடைக்கப்பட்டு அங்கிருந்து தங்கம், வெள்ளி நகைகள், பட்டு சேலைகள், பணம்
உள்ளிட்டைவை கொள்ளை போனது.
இது தொடர்பாக ஓமலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். இந்த வழக்கில் இளம்பிள்ளை பகுதியைச் சேர்ந்த மோகன்ராஜ் (23) என்பவர் ஈடுபட்டது தெரிய வந்தது. எனவே அவரை போலீஸார் தேடி வந்தனர். அவர் கடந்த இரண்டு ஆண்டுகளாக போலீஸாருக்கு சவால் விடும் வகையில் தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்நிலையில், இளம்பிள்ளை கறிக்கடை பேருந்து நிலையம் அருகேயுள்ள உறவினரை பார்க்க வந்த மோகன்ராஜை ஓமலூர் போலீஸார் இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் இருந்த நகை மற்றும் பணத்தை மீட்டு அவரை ஓமலூர்
நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
NEWS EDITOR : RP