வேலூர் மாவட்டம் அணைக்கட்டு அடுத்த இலவம்பாடி பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இதில் 6 வகுப்பு முதல் 10 ஆம் வகுப்பு வரை ஆண்கள் மற்றும் பெண்கள் என சுமார் 500க்கும் மேற்பட்டோர் பயின்று வருகின்றனர். இங்கு ஆங்கில ஆசிரியரயை தீபலட்சுமி என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் கடந்த 8 ஆம் தேதி 7 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளுக்கு வீட்டுப்பாடத்தை ஸ்கெட்ச் ஆல் எழுதி வர சொல்லி உள்ளார். மாணவிகள் பெண்ணால் எழுதி வந்ததால் மாணவிகளை ஆபாச வார்த்தைகளால் திட்டியும், மாணவிகள் அனைவரையும் பிரம்பால் ஆக்ரோஷமாக தாக்கியும் உள்ளார் என்று கூறப்படுகிறது.
இதில் 3 மாணவிகளுக்கு தோள்பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டதால், வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக பெற்றோர் புகார் அளித்ததன் அடிப்படையில் விரிஞ்சிபுரம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
NEWS EDITOR : RP